Ads Area

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த துபாயில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மரப்படகு!

உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக துபாயில் பிரமாண்டமான மரத்திலான படகுகள் இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1940-ம் ஆண்டில் ஒபைத் ஜுமா பின் மஜீத் அல் பலாசி என்ற அமீரகத்தை சேர்ந்தவர் பிரபலமான பாரம்பரிய மரப்படகுகளை தயார் செய்யும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், அவரது மகன் மஜீத் ஒபைத் அல் பலாசி (52) மிகப்பெரிய அளவில் பராம்பரிய முறையில் மரப்படடிக உருவாக்க எண்ணி அதற்கான முயற்சியில் கடந்த 2017ம் ஆண்டில் இறங்கினர். ‘ஒபைத்’ என்று அந்த பெரிய மரப்படகிற்கு பெயரிட்டார். இந்த மரப்படகின் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இது 300 அடி நீளமும், 67 அடி அகலமும், 32 அடி உயரமும் கொண்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒர கால்பந்து மைதானத்தின் அளவில் மரப்படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2,500 டன் ஆகும். இதில் சுமார் 400 யானைகளின் எடைக்கு சமமான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதன் மொத்த கொள்ளளவு 6,000 டன் ஆகும். இந்த படகில் 1,850 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மரப்படகில்,  மணிக்கு 14 நாட்டிக்கல் (25 கி.மீ) வேகத்தில் பயணிக்க முடியும். வரும் காலங்களில் ஏமன், சோமாலியா, சூடான், எகிப்து, கென்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சரக்கு வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும், விரைவில் உலகின் அனைத்து துறைமுகங்களிலும் இந்த படகை காணமுடியும் என்று மஜீத் ஒபைத் அல் பலாசி கூறுகிறார். தற்போது உலகின் பிரமாண்டமான மரப்படகு என கின்னஸ் நிறுவனம் சான்றளித்துள்ளது. 

இன்றும் துபாயில் பல உள்ளூர் வர்த்தகர்கள் தொன்று தொட்டு 47 தலைமுறைகளாக பாரம்பரிய படகு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். இதுவரை கின்னஸ் சாதனை புரிந்த உலகின் மிகப்பெரிய மரத்திலான படகு குவைத் நாட்டில் இருந்தது. தற்போது இந்த சாதனையை ஒபைத் மரப்படகு முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe