கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசி பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகள் பதிவாகி வருகின்ற நிலையில் உலக சந்தையில் தற்போது தங்கத்திற்கான விலை குறைந்து வருவதாக சர்வதேச பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1808 டொலர் என்ற அடிப்படையில் நிலவுகிறது
கடந்த ஆகஸ்ட் ஜூலை மாதங்களில் தங்கத்தின் விலை 2 ஆயிரம் டொலருக்கு மேல் அதிகரித்திருந்தது
நேற்றைய தினத்தை விட இன்று தங்கத்தின் விலை சுமார் 30 டொலர் அளவில் குறைவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் வளைகுடா நாடுகளில் தங்கத்தில் விலை விபரம் தொடர்பான தகவல்களை கீழே உள்ள படங்களில் காணலாம்.