Ads Area

கல்முனையில் இரானுவ படை வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு.

(சர்ஜுன் லாபீர்)

இலங்கை இராணுவ வழக்கமான படைக்கு தொழில் முறை,தொழில் அல்லாத பயிற்சி வீரர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை இன்று (23)கல்முனை நகர மண்டபத்தில் கல்முனை இராணுவ மேஜர் ரஞ்சன தேசப்பிரிய தலைமையில் நடைபெற்றது.

இந் நேர்முகப் பரீட்சையில் அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர்,பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாசீன் பாவா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுமார் 35000 இராணுவ வீரர்களை சேர்த்து கொள்ளுவதற்காக நாடு பூராகவும் நேர்முகப் பரீட்சை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe