தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந் நாட்டு அரசு 5 வீதமாக இருந்த வரியினை கடந்த ஜூலை மாதம் முதல் 15 வீதமாக அதிகரித்தது தற்போது 15 வீதமாக இருக்கும் வரி அறவீட்டு முறையானது மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சவுதி அரேபியாவில் கொரோனோ வைரஸின் தாக்கம் மிக அதிகளவாக குறைந்து வருவதோடு சவுதி அரேபியாவில் அமுலில் இருந்த பெரும்பாலான அனைத்து கெடுபிடிகளும் தளர்த்தப்பட்டு தற்போது சவுதி அரேபியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்த வரி அறிவிடுதலானது தற்போது குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர் டாக்டர் மஜித் அல் கசாபி (Dr. Majid Al Qasabi) தெரிவித்துள்ளார்.
இது சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாகப் பார்க்கப்படுகின்றது. இருந்த போதும் இது தொடர்பான எவ்வித இறுதி முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.