Ads Area

மாளிகைக்காட்டில் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றம் : தவிசாளர், பிரதேச செயலாளர் களத்தில் குதிப்பு.

 நூருல் ஹுதா உமர்.

காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கரையோர பேனல் திணைக்கள  எல்லைக்குட்பட்ட சட்ட விரோத கட்டிடங்கள் அனைத்தும் பிரதேச சபை இயந்திரங்களை கொண்டு இன்று உடைத்து அகற்றப்பட்டு கடலோர மீன்பிடி மீனவர்களின் அசௌகரியங்கள் தீர்த்து வைக்கப்பட்டன.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், கரையோர பேனல் திணைக்கள  அதிகாரிகள் நேரடியாக களத்தில் நின்று சட்ட விரோத கட்டிடங்கள் அனைத்தும் பிரதேச சபை இயந்திரங்ககளை கொண்டு இன்று உடைத்து அகற்றப்பட்டது. அப்போது மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே நீண்ட நேர சலசலப்பு நிலை காணப்பட்டது. அதிகாரிகளின் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த மீனவர்கள் பல வருடங்களாக மீன்வாடிகளை நடாத்தி வரும் மீனவர்களாகிய எங்களுக்கு மாற்றிடம் தேவை. அத்துடன் வியாபார மேம்பாடுகளை விஸ்தரிக்க கஷ்டப்படும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டியவர்கள் இப்படி எங்கள் கட்டிடங்களை  உடைப்பது வேதனையாக இருக்கின்றது என்றனர். மீன்பிடி தொழிலை செய்யும் மீனவர்களின் நலன் கருதியே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக அதிகாரிகள் இங்கு மீனவர்களிடம் தெரிவித்தனர். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe