Ads Area

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.

ஐ.எல்.எம் நாஸிம் 

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஏக மனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .

33வது சபை அமர்வின் போதுஅடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை யை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசீரில் தலைமையில் திங்கட்கிழமை இன்று  (10) இடம்பெற்றது.

சபை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார்.

சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு - செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன -03, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -02, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி -01, ஐக்கிய தேசியக் கட்சி  - 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-01 என மொத்தமாக 12உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe