மாகாண, உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை பழைய முறையில் நடாத்துங்கள்"
பாராளுமன்றில் ஹாபிஸ் நசீர் கோரிக்கை
ஊடகப்பிரிவு
மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல்களை பழைய முறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் ஹாபிஸ் நசீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரவு செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
உள்ளுராட்சித் தேர்தல் புதியமுறைப்படி நடாத்தப்பட்டடதால் இடம்பெறுகின்ற குழப்ப நிலைகள் நமக்குத் தெரியும் நாட்டில் 338 உள்ளுராட்சி சபைகளில் 140 மாத்திரமே ஸ்திரமானதாக இயங்கி வருகின்றது.
வரவு செலவுத் திட்டத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்ப்பட்ட மாவட்டங்களில் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்வாங்கப்பட்டதை வரவேற்கின்றேன்.
நான் முதலமைச்சராக இருந்த போது இதே மாதிரியான கருத்திட்டத்தை கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்தேன். ஏறாவூர் சவுக்கடியில் 319 ஏக்கர் காணியும் இதற்கு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. எனினும் கிழக்கு மாகாண ஆட்சி முடிவுற்றதை அடுத்து இத்திட்டம் தொடர முடியாமல் போய்விட்டது. எனவே அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள தொழிநுட்ப பூங்காவை இதை இடத்தில் அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்.
அதே போன்று இந்த அரசாங்கம் "பெப்ரிக் பார்க் " ஒன்றையும் அமைப்பதற்கு உத்தேசித்துள்ளது. எனவே இவ்வாறான திட்டங்களை நாங்கள் பாராட்டுவதோடு எனது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டங்களுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா திண்டாட்த்ததை தீர்க்க இது உதவுமென்பதோடு பிரதமர் மற்றும் துறைசார்ந்தவர்களிடத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.