Ads Area

ஜப்பானுக்கு படிக்கச் சென்று ஜப்பான் சிறுமியை கடத்தி வந்த இலங்கை இளைஞர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிறுமியை காதலித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் இலங்கைக்கு அழைத்துவந்து சட்டவிரோதமான முறையில் தங்கவைத்திருந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தலைமறைவான ஜப்பான் நாட்டு சிறுமி மற்றும் இலங்கை இளைஞன் ஆகியோர் கொச்சிக்கடை பொலிஸாரால் நேற்று (25) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய கொழும்பிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதரகமும் உதவிபுரிந்துள்ளது. குறித்த ஜப்பான் சிறுமி தற்சமயம் கர்ப்பமாக இருப்பதுவும் தெரியவந்துள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் சந்தேக நபர் கடந்த மார்ச் மாதம் அழைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாயாரினால் இலங்கை பொலிஸ் மற்றும் ஜப்பான் தூதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து, சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, கொச்சிக்கடையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் காதலனின் சகோதரியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜப்பானில் இருந்து தனது காதலியின் தாய் இலங்கைக்கு வருவதை அறிந்த இளைஞர், தனது சகோதரியின் உதவியுடன் சுற்றுலா ஹோட்டலில் இருந்து காதலியுடன் மீண்டும் தலைமறைவானார்.

அதனையடுத்து, கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபரின் தாய், சகோதரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்த, குறித்த இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நீர்கொழும்பு, கொச்சிக்கடையைச் சேர்ந்த இளைஞனும், குறித்த ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞன், 4 வருடங்களுக்கு முன்னர் தனது உயர் கல்வியை தொடர்வதற்காக ஜப்பான் நோக்கி பயணித்துள்ளார்.

தனது கல்வி நடவடிக்கைகளுக்காக பாரிய நிதி தேவைப்படுவதை உணர்ந்த குறித்த இளைஞன், ஜப்பானிலுள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக பணி புரிந்துள்ளார்.

வர்த்தகர், வர்த்தகரின் மனைவி மற்றும் அவரது 15 வயதான மகள் ஆகியோரே அந்த வீட்டில் வாழ்ந்துள்ளனர்.

இவ்வாறு பணிப்புரிந்து வந்த இலங்கை இளைஞனுக்கும், 15 வயதான ஜப்பான் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, குறித்த இளைஞன் தனது காதலியை இரகசியமான முறையில் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe