Ads Area

கலைக்கான கெளரமான பங்களிப்பை மருதம் கலைக்கூடல் ஆற்றி வருகின்றது- முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கலைத்துறையை பிரதிபலிக்கும் வகையில் கலை உணர்வு சார்ந்த விடயங்களை மிகவும் காத்திரமான முறையில் மருதம் கலைக்கூடல் செயலாற்றுகின்றது என சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் , தேசிய காங்கிரஸ் சார்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மருதம் கலைக்கூடலின் சாய்ந்தமருது தலைமை அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் (25)

புதன்கிழமை  இரவு நடைபெற்றது. 

இதன் போது இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இங்கு மேலும் அவர் உரை நிகழ்த்துகையில்,

எமது பிரதேசத்தில்  கலைத்துறையை வலுவூட்டி  கலைக்கான கெளரமான  பங்களிப்பை மருதம் கலைக்கூடல்ஆற்றி வருகின்றது. மேலும் இதன் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்

இப் பிராந்தியத்தில் கலைத்துறையில் நிலைத்து நிற்கின்ற ஓர் அமைப்பு என்றால் இதன் பங்களிப்பு மிகையாகாது. மருதம் கலைக்கூடல் மன்றம் கலை துறை சார்ந்தோருக்கு வரமாகும் என்றார்.

மேலும் நிகழ்வின் அங்கமாக அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா காலத்தில் கலைஞர்களின் நிலைகள் தொடர்பில் இந்நிகழ்வில் ஆராயப்பட்டதுடன், அண்மையில் காலமான சாய்ந்தமருதை சேர்ந்த பிரபல இலக்கியவாதி கலைமகள் ஹிதாயா றிஸ்விக்கான இரங்கலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார், அமைப்பின் பிரதித்தலைவர்களான கலைஞர் என்.எம். அலிகான், எம்.எச்.எம்.அலி றஜாய், அமைப்பின் செயலாளர் அறிவிப்பாளர் ஐ.ஜாபீர், பிறை எம்.எம். அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல், ஊடக செயலாளர் கலைஞர் யூ.எல்.என். ஹுதா, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமை முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம். நிஸார், தொழிலதிபர் எம்.எச். நாஸர், கவிஞர் கே.எம்.எம்.ஏ. அஸீஸ் உட்பட அமைப்பின் ஆலோசகர்கள், உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe