நியூசிலாந்தில் உள்ள ரோயல் நியூசிலாந்து போலீஸ் அகாடமி (Royal New Zealand Police Academy) யில் பட்டம் பெற்ற 30 வயது நிரம்பிய, ஷீனா அலி என்ற முஸ்லிம் பெண் போலிஸ் அதிகாரி ஒருவர் போலிஸ் முத்திரை பொறிக்கப்பட்ட ஹிஜாப் அணிய அனுமதியளிக்கப்பட்டுள்ளார். இதனால் நியூசிலாந் நாட்டின் வரலாற்றில் முதல் ஹிஜாப் அணிந்த பெண் போலிசாக இவர் கருதப்படுகின்றார்.
ஷீனா அலி சில வருடங்களுக்கு முன்னர் நியூஸிலாந் நாட்டில் பள்ளிவாசலில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அந் நாட்டு நியூசிலாந்து போலீஸ் அகாடமி (Royal New Zealand Police Academy) யில் போலிஸில் சேர விண்ணப்பித்திருந்தார்.
இது குறித்து ஷீனா அலி குறிப்பிடுகையில்,
ஹிஜாப் அணிந்து போலிஸ் உடையணிந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது, இதனால் நியூசிலாந்தில் உள்ள பல முஸ்லிம் பெண்களும் இத் துறையினை தேர்வு செய்து போலிஸில் சேர விருப்பம் கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.