ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் எந்தவொரு அபராதமும் கட்டணமும் இன்றி நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரையிலான நாட்களில் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஓமான் தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டவர்களுக்கான மனிதவள அமைச்சகத்திற்கான பணி அனுமதியிலிருந்து எழும் அனைத்து கட்டணங்கள் மற்றும் அபராதங்களிலிருந்து முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் பயண ஆவணங்களை புதுப்பிக்க ஓமானில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரகங்களுக்குச் சென்று, பின்னர் அவர்கள் ஓமானை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை இறுதி செய்ய மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தொழிலாளர் அமைச்சக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அவர்களின் பயண ஆவணங்கள், பயண டிக்கெட்டுகள் மற்றும் PCR சான்றிதழ், அத்துடன் அவர்கள் செல்லவிருக்கும் நாட்டில் தேவைப்படும் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகை காலத்தில் எந்த அபராதமும் இன்றி ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்பும் நபர்கள் மனிதவள அமைச்சகம் தொடங்கியிருக்கும் லிங்கில் (https://www.manpower.gov.om/ManpowerAllEServices/Details/Registration-for-Departure-within-the-Grace-Period-306) சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks for the news - khaleejtamil