ஏ.ஜே.எம்.ஹனீபா
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து மனிதநேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பும் இணைந்து கொவிட் - 19 நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வோமா எனும் வேலைத்திட்டத்தை இன்று (25) உத்தியோகபூர்வமாக சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கபீர்,மனிதநேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பின் தலைவர் இர்ஷாட் ஏ காதர், சிரேஷ்ட பொதுச் சுகாதார அதிகாரிகள் உட்பட மனிதநேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறிலங்கா அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.