Ads Area

வாகனத்தில் அமர்ந்தவாறு வீதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.

இன்று (26) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்திருந்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe