Ads Area

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றகுமான் ஓய்வு பெறுகிறார்.

நூருல் ஹுதா உமர்

கடந்த 6 வருடங்களாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஐ.எல்.ஏ. றகுமான் அவர்கள் இன்று தனது 60 வயதினைப் பூர்த்தி செய்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். 1984 ஆம் ஆண்டு ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் கடந்த 36 வருட தனது அரச சேவையில் ஆசிரியராக, அதிபராக மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளார்.

அவர் தனது சேவைக்காலத்தில் பெரும் பகுதியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேவையாற்றி அப்பிரதேசத்தின் பெண்கள் கல்விக்காக பெரும் பங்காற்றியவர். இவருடைய காலத்தில் சாய்ந்தமருது கல்விக் கோட்டம் கல்வியில் பல சாதனைகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe