யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் Electro Engineering Technology கற்கை நெறியை தொடரும் இரண்டாம் வருட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் கொரோனா வைரருந்து பாதுகாப்பதற்கான மூன்று புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளிடமிருந்து வெளியில் வைரஸ் பரவாமல் இருப்பதற்குரிய Emergency Safety Box for Corona virus எனும் கண்டு பிடிப்பாகும். கொரோனா வைரஸுக்கள் 80 நனோமீற்றர் தொடக்கம் 120 நனோமீற்றர் விட்டத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதே விட்ட அளவுகளிலான கதிர்வீச்சினால் அழிக்கக்கூடிய கருவியான Radiation Range Killer for Corona virus எனும் கண்டுபிடிப்பாகும். இது மற்றைய UV கதிர்வீச்சுக்கள் அல்லாமல் விசேடமாக வைரஸின் விட்டத்துக்காக தயாரிக்கப்பட்டதாகும். இதன் மூலம் மனித உடல்கள் அல்லாத பிற பொருட்களை இக் கருவியின் மூலம் சுத்தம் செய்ய முடியும். இதில் கதிர்வீச்சினால் மனித உடலுக்குச் செல்லாமல் தடுப்பதற்குரிய Sensors இருப்பது விசேட அம்சமாகும்.
மூன்றாவது கண்டுபிடிப்பாக, பொதுவாக கொரோனா வைரஸுக்கள் சுவாசம் மூலமும் கைகளின் தொடுகை மூலமாகவும் பரவுகிறது. சுவாசம் மூலமாக பரவுவதைத் தடுப்பதற்கு முகக் கவசங்களை அணிகின்றோம். கைகளினால் பரவுவதைத் தடுப்பதற்கு இலகுவாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய Safety Hand Gloves for Corona virus எனும் கையுறைகளையும் உருவாக்கியுள்ளார். இந்த கையுறைகள் இரு பக்கங்களும் திறந்தவெளியைக் கொண்டுள்ளதாக இருப்பதாலும் தேவைக்கேற்ப வடிவங்களை மாற்றிக்கொள்ள முடிந்தாலும் எந்த நேரத்திலும் பயன்படுத்த முடியும் என தமது கண்டுபிடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இம் மூன்று கண்டுபிடிப்புக்களுடன் மொத்தமாக இதுவரை 102 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ள இவர், இதுவரை 43 தேசிய விருதுகளையும் ஐந்து நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் ஆறு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர், சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.