காரைதீவு சகா.
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகளின் படி சம்மாந்துறை கல்வி வலையத்தில் இம் முறை 206 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை வலையத்திற்குட்பட்ட இறக்காமக் கோட்டத்தில் 45 மாணவர்களும், நாவிதன்வெளி கோட்டத்தில் 32 மாணவர்களும், சம்மாந்துறைக் கோட்டத்தில் 129 மாணவர்களும் சித்தியடைந்திருந்தனர்.
கடந்த வருடம் (2019) புலமைப்பரிசில் பரீட்சையில் 203 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர் இறக்காமக் கோட்டத்தில் 35 மாணவர்களும், நாவிதன்வெளி கோட்டத்தில் 36 மாணவர்களும், சம்மாந்துறைக் கோட்டத்தில் 132 மாணவர்களும் சித்தியடைந்துள்ளர்.
கடந்த வருடத்தினை விட இம் முறை கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாகவும் சித்தியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் நன்றி தெரிவிப்பதாகவும் வலையக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.