தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியால் ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் அணிந்திருந்த மாஸ்க்கினை கழற்றி அதனை நாடிப்பக்கம் கீழிறக்கி விட்டு நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தமைக்காக அவருக்கு 1000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக சவுதி அரேபிய சுகாதாரத் துறையினரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் அதனை மீறுவோர் விடையத்தில் கடுமையான அபராதம் மற்றும் சட்டநடிவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
சவுதியில் ஒருவர் மாஸ்க் அணியாது விட்டால் அல்லது மாஸ்க்கினை உரிய முறையில் அணியத் தவறினால் அத்தகையவர்களுக்கு 1000 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபியா ஏற்கனவே அனைவருக்கும் அறிவித்திருந்தது.
இதனை மீறிய வகையில் குறித்த நபர் மாஸ்க்கினை கழற்றி நாடிப் பகுதியில் கீழிறக்கி அணிந்தமையினால் அவருக்கு 1000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சவுதியில் வாழும் இந்திய இலங்கை சகோதரர்கள் மாஸ்க் அணியும் விடையத்தில் பொடுபோக்குத்தனமாக இருந்து விடாது மாஸ்க்கினை உரிய முறையில் அணிந்து அபராதங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.