Ads Area

சவுதி அரேபிய எண்ணைக் கப்பல் ஒன்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல்; சவுதியின் நட்பு நாடுகள் கண்டனம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபிய ஜித்தா கடற்பரப்பில் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றின் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலை சவுதி அரேபிய நட்பு நாடுகளான ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பங்ரைன், குவைத், ஓமான் போன் நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இத் தாக்குதல் சவுதி அரேபியாவிற்கு மட்டுமல்லாது ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் மேலும் கடல் வழிப் போக்குவரத்திற்கு இது பாரிய பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்தும் செயலாகும் எனவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe