தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியினை சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக வழங்க சவுதி அரேபிய அரசு இணக்கம் தெரிவித்து அவற்றினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியினை 3 படிமுறைகளின் அடிப்படையில் வழங்க சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்படிமுறை.
முதற்படிமுறையில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், தொற்று நோயினால் அவதிப்படுவோருக்கும், 40 கிலோவுக்கு மேற்பட்ட உடற்பருமன் கொண்டோருக்கும், உருப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக அளவில் உள்ளோருக்கும், பக்கவாத நோய்த் தொற்று கொண்டோருக்கும் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளிட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்கள் கொண்டோருக்கும் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் படிமுறை.
இரண்டாம் படிமுறையில் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு, சுகாதாரப் பயிற்சியாளர்கள், 30 தொடக்கம் 40 கிலோ வரையான உடல் எடை கொண்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், கரோனரி தமனி நோய் உள்ளிட்ட நாள்பட்ட இதய நோய் நோயுள்ளவர்கள், மற்றும் நுரையீரல் பாதிப்பு புற்று நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் படிமுறை.
மூன்றாம் படிமுறையில் கொரோனா தடுப்பூசியினை யார் யாரெல்லாம் பெற்றுக் கொள்ள விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் 3ம் படிமுறையில் வழங்கப்படவுள்ளது.