(ஹஸ்பர் ஏ ஹலீம்,கிண்ணியா)
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
திருகோணமலை ஜமாலியா இறைச்சிக் கடையில் பணிபுரிபவரின் உறவினர்கள் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
கிழக்கில் இதுவரை 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 40 பேரும், மட்டக்களப்பில் 102 பேரும், அம்பாறையில் 23 பேரும், கல்முனையில் 613 பேருக்கும் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாளங்களில் திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருகோணமலை மாவட்டத்தில் 653 பேருக்கு P.C.R பரிசேதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
அதில் பாடசாலை மாணவர்கள் திருகோணமலை ஜமாலியாவில் 04 பேரும், கிண்ணியாவில் 02 பேருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் ஜமாலியா, துளசிபுரம், முருகாபுரி, கிண்ணியா பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
Madawala News.