Ads Area

யூடியூப்பில் பொம்மைகளை வைத்து பல கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்!

உலகம் முழுவதும் சிறு குழந்தைகள், கார்டூன்கள் பார்ப்பது, பொம்மைகளை வைத்து விளையாடுவது வழக்கம். இந்த 9 வயது சிறுவனும் அதைதான் செய்கிறார். ஆனால் அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சிறுவன் ரியான். 9 வயதே ஆகும் இந்த சிறுவன் விளையாட்டு பொம்மைகளை ரிவியூவ் செய்யும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரின் யூடிப்யூப் பக்கத்தின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சுமார் 2.7 கோடிக்கும் மேல். பொம்மைகளை ரிவியூவ் செய்வதால் இவர் ஆண்டுக்கு சுமார் ரூ.221 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளார். இதன் மூலம் சிறுவன் ரியான் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இந்த பட்டத்தை பெறுவது முதல் முறையல்ல, இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு ம் ( ரூ.125 கோடி), 2019ம் ஆண்டு ( ரூ.192 கோடி) வருமானம் ஈட்டி முதலிடத்தை பிடித்துள்ளார். ரியான் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் மொத்தமாக 9 யூடியூப் பக்கங்களை நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், பிரபல கார்டூன் தொலைக்காட்சியில் ரியான் பணியாற்ற பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரியானுக்கென தனியாக பொம்மை நிறுவனமும் உண்டு.

பொம்மைகளை ரிவியூவ் செய்வதில் ரியான் மட்டுமல்ல, தென் கொரியாவை சேர்ந்த போரம் என்ற சிறுவன் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe