தகவல் - சம்மாந்துறை அன்சார்.
அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனின் முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா உத்தரவிற்கு இணங்க, பஹ்ரைனில் 27 மருத்துவ மையங்களில் COVID-19 தடுப்பூசியினை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், ஒரு நாளைக்கு 5,000 பேருக்கு தடுப்பூசி போட எதிர்பார்ப்பதாகவும் இதனை 10 ஆயிரமாக அதிகரிக்க உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசினாது பஹ்ரைனின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று பஹ்ரைனின் முடிக்குரிய இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா தெரிவித்துள்ளார்.