இது குறித்து சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் “எக்ஸிட் விசா பெற்ற பயனாளி ஒருவர் நாட்டைவிட்டு குறிப்பிட்ட நாளிற்குள் வெளியேறாமல் விசா காலாவதியானால், அந்த விசாவினை ரத்து செய்து புதிய எக்ஸிட் விசா ஒன்று வழங்க SR1,000 அபராதம் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறையை மேற்கொள்ள பயனாளியின் அடையாள அட்டை செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் இயக்குநரகம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
தனது ஊழியர் ஒருவருக்கு எக்ஸிட் விசா கிடைத்ததாகவும் அனால் அவர் நாட்டை விட்டு வெளியேறாத நிலையில் அந்த விசா தற்போது காலாவதியாகி விட்டதாகவும் மேலும் அவரின் ரெசிடென்சி பெர்மிட் செல்லுபடி காலம் முடிந்துவிட்டதாகவும் கூறிய ஒரு முதலாளியின் கேள்விக்கு பதிலளித்த சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சவுதி அரேபியா பெரிய தொழிலாளர் சீர்திருத்தங்களை வெளியிட்டதும், முதலாளிகளின் ஒப்புதல் இல்லாமலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எக்ஸிட் மற்றும் ரீ-என்ட்ரி விசா வழங்குதல் போன்றவற்றை ஒழுங்குபடுத்தியதும் கவனிக்கத்தக்கது. சவூதி அரேபியாவின் இந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் வரும் 2021 ம் ஆண்டு மார்ச் 14 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு நன்றி - www.khaleejtamil.com

