முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த குழுவில் மேலும் முஸ்லிம்களும் வைரஸ் தொடர்பான விஞ்ஞானிகளும் உள்ளடக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் சமநிலையை பேணும் வகையிலேயே குழு விரிவாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த குழுவில் சேர்க்கப்படும் நிபுணர்கள் யார் என்ற விடயத்தை அசேல குணவர்த்தன வெளியிடவில்லை.
ஏற்கனவே இந்த குழுவில் உள்ளடங்கியுள்ள உறுப்பினர்களை விபரங்களை வெளியிடுமாறு சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த குழு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய கோரும் விண்ணப்பம் தொடர்ந்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.