Ads Area

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் திருத்தம் (விபரம் இணைப்பு)

மார்ச் 2020 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு உள்வரும் பயணிகளுக்கான நடைமுறை பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.




பின்வரும் நடைமுறைகள் 2020 டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும்:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால வீசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கான விஷேடமான மீளழைத்துவரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் (வெளிநாட்டு அமைச்சு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்) ஏற்பாடு செய்யும்.

எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரம் / ஆலோசனையின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில் கட்டணம் செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் (இரட்டைக் குடியுரிமையுடையவர்கள்) இலங்கைக்கு எந்தவொரு வணிக / மீளழைத்து வராத விமானங்களிலும் வெளியுறவுச் செயலாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கண்ட ஏற்பாட்டின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தலை கட்டாயமகாக் கடைபிடிப்பதனை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட விமானத்தின் முழுமையான பொறுப்பாகும்.
புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைவான மேலதிக மதிப்பீடுகளின் அடிப்படையில், விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 21




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe