குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புதிதாகப் பிறந்த கிட்டத்தட்ட 30 குழந்தைகளை விற்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை கடத்தல் நடவடிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து 47 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவைப் பகுதியில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களை மையப்படுத்தி அவர்களது பொருளாதார சிக்கலை இவருக்கு சாதகமாப் பயண்படுத்தி அவர்களிடமிருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்று பணம் கொடுத்து விட்டு குழந்தைகளை பெற்று வந்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குழந்தைகளை விற்ற 12 கர்ப்பிணிப் பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே தங்கள் குழந்தைகளை மூன்றாம் தரப்பினரிடம் பணத்திற்காக ஒப்படைத்துள்ளனர், மேலும் மூன்று பேர் தங்கள் குழந்தைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மாத்தளையில் வசிக்கும் சந்தேக நபர் இன்று மொரட்டுவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.