கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவர்களின் உடல்களை கட்டாயமாக எரிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் இன்று கொழும்பில் உள்ள பொரளை கனத்த மையவாடிக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம் பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன், ராஜித சேனாரத்ன, அலிசாஹிர் மௌலானா, முஜிப் ரஹ்மான், மரிக்கார் மற்றும் மனோ கணேசன் ஆகிய எதிர்தரப்பினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.