By: Dr Ziyad Aia
பல நாட்களுக்கு முன்னர் எழுதிய பதிவு, பதிவிடாமல் தவிர்த்து வந்தேன். இன்றும் 23-12-2020 COVID ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட செய்தி எட்டுகிறது. இனியும் முடியவில்லை.
ஜனாஸா எரிப்பு இடைநிறுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கடிதம் ஒன்றுடன் செய்தி வலைத்தளங்களில் பரவியது. உண்மையில் இது உத்தியோகபூர்வமாக வைத்திய சாலைகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்ல.
குறிப்பிட்ட கடிதமானது, சுகாதார சேவை பணிப்பாளரினால் "முஸ்லிம்களின் COVID-19 இனால் மரணித்த உடல்களை புதைப்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் கிடைக்கும்வரை உடல்களை குளிரூட்டிகள் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதோடு அதற்கான ஒரு உள்ளக ஏற்பாட்டை செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக" நீதி அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு அதன் பிரதி சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும், 5 வைத்தியசாலை JMO நிலையங்களுக்கும் பிரதியிடப்பட்டது மாத்திரமே.
அதில் பின்வரும் JMO நிலையங்களுக்கு குளிர்சாதன வசதிகளை செய்துகொடுக்கவும்: கொழும்பு, கண்டி, களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் AMH கல்முனை என்றே கூறப்பட்டுள்ளது.
இக்கடிதம், அரசாங்கத்தால் குளிர்சாதன வசதி செய்து தருவதற்கு முன்னர் எமது தனவந்தர்களை கொண்டு ஏற்பாடு செய்வதற்காக வெளியே எடுக்கப்பட்டது.
இதனை வைத்துக்கொண்டு எரித்தல் இடைநிறுத்தப்பட்டதாக தலைப்பு செய்தி இட்டு பதிவிடுவது பிழையான செய்தியையே கொண்டுசெல்லும்.
கொழும்பில் freezer வசதி செய்யப்படுகிறது. ஏனைய இடங்களுக்கும் விரைவில் கிடைக்க ஏற்பாடு நடக்கிறது.
பல வைத்தியசாலைகளின் Mortuary களில் உடலை பாதுகாக்கும் Cooler இருந்தபோதும் அது சில நாட்களுக்கே தாக்குப்பிடிக்கும். அத்துடன் சாதாரண மரண நோயாளிகளின் உடலும் அவற்றில் சேமிக்கப்படுவதால் தொற்று பரவலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Freezer குளிரூட்டியே நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும். அது இப்போது இலங்கையில் மீன்பிடியோடு சம்பந்தப்பட்ட பாரிய தொழிற்சாலை இடங்களிலேயே உள்ளன.
பல சிக்கல்களுக்கு மத்தியில் முயற்சிகள் நடைபெறுகின்றன. கொழும்பில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அது எவ்வளவு நாளைக்கு?
Freezer இல்லாததை காரணம் காட்டி இன்றும் ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்றன.
இப்போதைக்கு எரித்தலை தடுக்க "சம்மத கையொப்பம் இடாமல் இருப்பதும், வழக்கு தாக்கல் செய்வதுமே வழிமுறையாக மக்களால் கையாளப்பட்டு வருகின்றன.
காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு வெற்றி அளித்துள்ளது. அதேநேரம் நேற்று, அழுத்கமவில் செய்யப்பட்ட வழக்கு பாதகமாக முடிந்துள்ளது.
அதற்கும் சுகாதார சேவை பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் காண்பிக்கப்பட்டது. (22-12-2020 திகதி இடப்பட்டது.) இக்கடிதம் இப்போது எல்லா வைத்தியசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் "ஏற்கனவே வெளியிடப்பட்ட கடிதம், நீதி அமைச்சருக்கும், தனக்கும் இடையில் நிகழ்ந்த தகவல் பரிமாற்றமே அன்றி Circular கிடையாது. அதில் உரிமை கோரப்படாத உடல்களை பாதுகாக்க இருக்கும் வசதிகளை விட மேலதிக குளிரூட்டி வசதிகள் செய்து கொடுக்குமாறே கோரப்பட்டுள்ளது. மற்றப்படி இருதித்தீர் மானம் வரும்வரை COVID உடல்களை கையாள்வது தொடர்பான வழமையான (Circular) நடைமுறையே பின்பற்றப்படும்" என்று சுகாதார சேவைகள் பணிப்பாளறினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
(கடிதம் இணைத்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.)
20 நாள் குழந்தை எரிக்கப்பட்டதிலிருந்து இன மத பேதமின்றி மக்கள் மத்தியில் எழுந்த அதிர்வலை, வெள்ளைத் துணி போராட்டம் என மக்கள் கிளர்ந்து எழும்போது அதனை மளுங்கடிக்க Freezer கதை கிளம்பியதா என கேள்விகள் இப்போது எழாமல் இல்லை.
எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வ Circular களை எதிர்பார்க்கலாம்.
இதேநேரம், இவ்வளவு நாளாகியும் வறண்ட இடம் பார்க்க சென்ற நிபுணர் குழு எங்கே?
இப்போதுதான் Committee க்கே புதிய ஆட்கள் சேர்க்கினம்.
நேற்றைய அமைச்சரவை கூட்ட அறிக்கை வாசித்த அமைச்சர் Ramesh Pathirana மிக விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.
நம்பிக்கையோடு பிரார்த்தனைகளுடன் அகிம்சை வழியில் போராடுவோம்.
தீர்க்கமான இறுதி முடிவு கிடைக்கும்வரை முயற்சிகள் தொடரட்டும்.