கத்தார் சாலையோரம் ஒன்றில் பறவைக் கூட்டத்தை வலை வீசிப் பிடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாதையோரத்தில் குழுமி நின்ற பறவைக் கூட்டத்தை காரில் வந்த ஒருவர் வலை வீசி பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று கத்தார் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது.
மேற்படி நபரிடமிருந்து பறவைகளைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட வலை, மற்றும் ஏனைய கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.