Ads Area

கத்தாரில் உள்ள அல் வக்ரா (Al Wakra) மீன் மார்க்கெட்டில் மலிவான விலையில் விற்கப்படும் மீன்கள்.

கத்தாரில் உள்ள Al Wakra மீன் மார்க்கெட்டில்  பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனையானது, சில்லறை விலையை 10 முதல் 35 சதவீதம் வரை குறைக்க உதவுகிறது என விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் உள்ளூர் அரபு செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த குளிர்காலத்தில் அதிகமான மீன்களை மார்கெட்டிற்கு சப்ளை செய்வதால் Hamour மற்றும் வேறு வகையான மீன்கள் அளவுக்கேற்ப கிலோவுக்கு QR25 முதல் QR41 வரை விற்பனை செய்யப்படுகிறது, அதுவே கோடை காலத்தில் மீன்களின் விலைகள் இரட்டிப்பாகி ஒரு கிலோவுக்கு QR70 முதல் QR80 வரை விற்கப்படுகின்றது என சந்தையில் விற்பனையாளரான Mohamed Munir தெரிவித்துள்ளார்.

மேலும், நாள்தோறும் சந்தையில் பல்வேறு கடைகளில் உள்ள மீன்களை பரிசோதிக்கும் செயல்முறை செய்யப்படுகிறது என்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்ற மீன்கள் அழிக்கப்படுகிறது என்றும் அல் வக்ரா நகராட்சியின் சுகாதார கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த Dr.AbuOkla Alsamani தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe