சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் சவுதியில் வாழும் இலங்கையர்களுக்கு இன்று முக்கிய அறிவித்தல் ஒன்றை தங்களது உத்தியோகபூர்வ முகநுால் ஊடாக வெளியிட்டுள்ளார்கள்.
அறிவித்தல்.
எமது தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் என கூறிக் கொண்டு இலங்கையர்களுக்கு தொலைத் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கு பணம் வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்தும் சில மோசடிக்காரர்கள் தொடர்பாக எமது தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இவர்களை நம்பி எவ்வித பணத் தொகையையும் வழங்க வேண்டாம் என பொது மக்களை எமது தூதரகம் அறிவுறுத்துகின்றது. நாட்டுக்குத் திரும்புகின்ற இலங்கையர்கள் விமாண டிக்கட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையிலுள்ள அல்லது சவூதியிலுள்ள டிக்கட் விநியோக எயார்லைன் அலுவலகங்களுக்கு நேரடியாகவே பணம் செலுத்த வேண்டும்.
இலங்கைத் துாதரகம்
ரியாத் நகரம் - சவுதி அரேபியா.