கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் இலங்கை வெளியுறவு அமைச்சின் அனுமதி பெறாமல் டிசம்பர் 26 முதல் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொது வான்போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபூல் தர்மதாச இதனை தெரிவித்தார்.
இதுவரை இலங்கையர்கள் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சில் முன் அனுமதிப்பெறவேண்டும் என்று அவசியம் இருந்தது. இதில் தற்போது மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
எனினும் நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படவேண்டும் என்று உபாலி தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ஒரு நாளில் சுமார் 3,500 பி.சி.ஆர் சோதனைகளைச் செய்ய வசதி உள்ளது.
மேலும் நாட்டிற்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3,500 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் தர்மதாச தெரிவித்துள்ளார்.