Ads Area

அக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும் : அக்கரைப்பற்று முதல்வர் ஸக்கி.

நூருல் ஹுதா உமர்  

இன்று "கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழு" காலை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கூடி

முடக்கப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் பற்றி ஆலோசித்து சில முக்கியமான தீர்மானங்களை அறிவித்தனர். அதனடிப்படையில் அக்கரைப்பற்று 5, அக்கரைப்பற்று 14, நகரப் பிரிவு 3

போன்ற பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனையின்  முடிவுகள் தொற்றாளர்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதால் அப் பிரதேசங்கள் அவசரமாக விடுவிக்கப்பட  கூடிய சாதக நிலை தோன்றியுள்ளதை உறுதிப்படுத்தினர் என்பதை மாநகர மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கரைப்பற்று .மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நகரப் பிரிவு 1 ல் உள்ள பொதுச்சந்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசமாகவே  கருதப்படும்.பொது சந்தைக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சென்று-வரவும், வியாபாரிகள் தங்கள்  வியாபாரங்களில் ஈடுபடவும் ஒரு புதிய திட்டத்தை வர்த்தகர்களுடன்  கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதால் நாளை அதற்கான கூட்டம் நடைபெறும்.

அத்தியவசிய தேவையான மரக்கறி , மீன் , இறைச்சி மற்றும் பல சரக்கு பொருட் கடைகளுடன் பாமசிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை 6 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். பொதுமக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் மற்றும்  பள்ளிவாசல்களில் தொழுகை என்பன தொடர்ந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் உணவுகளை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன்,

பாடசாலை மற்றும் சலூன்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு காணப்படும். வங்கிகள் பகல் 12 மணிவரை மட்டுபடுத்தபட்ட அளவில் இயங்கும்.

எனவே சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளையும் , வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் காத்திரமான ஒரு முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe