தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தரை மார்க்கமான மற்றும் ஆகாய மார்க்கமான அனைத்து போக்குவரத்துச் சேவைகளுக்கும் ஒரு வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகில் பல நாடுகளில் தற்போது கொரோனா வைரஸின் பரிணாம வளர்ச்சி கொண்ட புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது குறித்த புதிய வைரசானது இங்கிலாந்து போன்ற நாடுகளில் கட்டுக்கடங்காத விதத்தில் பரவி வருகிறது, இந்த வைரசானது கொரோனா வைரசின் புதிய பரிமாண வைரசாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைரசின் தாக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களையும், குடியிருப்பாளர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே சவுதி அரேபியா தற்போது 1 வார காலத்திற்கு தற்காலிகமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்களை தடை செய்துள்ளது, மட்டுமல்லாது அனைத்து சர்வதேச தரை மார்க்கமான போக்குவரத்துக்களுக்கும் தடை விதித்துள்ளது.