Ads Area

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பாரிய விபத்து ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழப்பு.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் செவ்வாய்கிழமை (15-12-2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கின் சென்ற மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நோருக்கு நேர் மோதியத்தில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த செங்கலடி பங்குடாவெளியைச் சேர்ந்தவர்  தர்சன் 26வயதுடைய இளைஞர் ஒருவர்  ஸ்த்தலத்திலேயே உயிரிந்துள்ளார்.

இது தொடர்பில் காரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe