Ads Area

மீனவரொருவர் முதலைக்கடிக்கு இலக்காகி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் ஆற்று பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் முதலைக்கடிக்குள்ளாகி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

திருப்பழுகாமம் வன்னி நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் பொடியன் சங்கரலிங்கம் (58 வயது) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு முதலைக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

மீன் பிடிப்பதற்காக இரவு கூடு வைத்து விட்டு அதிகாலை அந்தக் கூட்டை பார்ப்பதற்காக சென்று நீரில் இறங்கும் போது முதலை மீனவரின் காலைப் பிடித்து இழுத்துள்ளது.

இதன்போது பல போராட்டத்தின் மத்தியில் கால் துண்டாக்கப்பட்ட நிலையில் பொது மக்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வெள்ளம் காரணமாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (TamilWin)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe