Ads Area

ஒரே நாளில் அம்மாவிற்கும், மகளுக்கும் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.

வயது என்பது வெறும் எண் மட்டுமே அது எதற்கும் தடையாக இருக்க கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது இளைய மகள் திருமணத்தின் போது அவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் உத்திரபிரதேசம், லாக்னோ மாவட்டம் கோரக்பூரை சேர்ந்தவர் பெலி தேவி. இவரது கணவர் கடந்த 25 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். பெலிதேவி தற்போது இறந்த கணவரின் சகோதர் ஜெகதீஷ் (55) என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கோரக்பூரில் 63 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த மாபெரும் திருமண விழாவில் பெலிதேவி திருமணம் செய்து கொண்டார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதே நிகழ்ச்சியில் பெலிதேவியின் இளையமகள் இந்துவிற்கும் திருமணம் நடைபெற்றது. ஒரே நாளில் மகளும், அம்மாவும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலருக்கும் வியப்பை அளித்தது.

இந்த திருமணம் குறித்து பெலிதேவி கூறுகையில், “எனது இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. அதனால் எனது இளையமகள் திருமணத்தின் போது நானும் இறந்த எனது கணவரின் சகோதரரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எனது குழந்தைகள் அனைவரும் தற்போது சந்தோஷமாக உள்ளனர்“ என்றுள்ளார்.

பெலிதேவியின் இளையமகள் இந்து 29 வயதான ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்து பேசுகையில், “எனது அம்மா மற்றும் அவரது கணவர் ஒருவரை ஒருவர் நன்கு கவனித்து கொள்வார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது“ என்றார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe