தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராச்சிய டுபாய் நகரில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் தனது நிறுவன சக ஊழியர் ஒருவரை 11 முறை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டுபாயில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று தனது நிறுவன ஊழியர்களில் பலரை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க 22 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது.
குறித்த பட்டியலில் தனது பெயரையும் சேர்க்குமாறும், தனது தாய் பல நாட்களாக சுகயீனமுற்றிருப்பதினால் தான் அவசரமாக நாடு செல்ல வேண்டியுள்ளதாகக் கூறி 38 வயதான இந்தியர் ஒருவரும் பட்டியலில் தனது பெயரையும் சேர்க்குமாறு பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
இந் நிலையில் நாட்டுக்கு அனுப்பி வைக்க நிறுவனத்தினால் வெளியான பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்கவில்லை அதே சமயம் அடுத்த நாள் அவரது தாயாரும் மரணமடைந்துள்ளார்.
இதனால் உரிய நேரத்தில் தன்னை நாட்டுக்கு அனுப்பாது இழுத்தடித்து தனது தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிய நிறுவனத்தின் மீது ஆத்திரமடைந்த அவர் பட்டியலை தயார் செய்த சக ஊழியரை 11 முறை கத்தியால் குத்தியுள்ளார்.