பாறுக் ஷிஹான்.
கல்முனை செயிலான் வீதியில் இருந்து சின்னத்தம்பி வரை மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதே வேளை இன்று(17) இப்பகுதியில் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாதவாறு வீதிகள் தற்காலிக தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் சுகாதார சேவை அதிகாரிகள் மாதிரி பரிசோதனைகளை எழுமாற்றகாக மேற்கொண்டு வருகின்றனர்.