வெளிநாடுகளிலிருந்து சுமார் 800 இலங்கையர்கள் இன்று நாடு திரும்ப உள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாட்டை வந்தடையும் அனைவரையும் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் விருந்தகங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து நாளாந்தம் 500 முதல் 700 பேர்வரை நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைவரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.