Ads Area

இந்தோனேசியா நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். 

மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 73பேர் உயிரிழந்தநிலையில், 637 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe