இலங்கைக்கான புதிய தூதுவர் மபாஸ் மொஹிதீன் (Mafaz Mohideen) தோஹாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார் குறித்த நிகழ்வு மத அனுஸ்டானங்களுடன் மிக எளிமையான முறையில் இடம்பெற்றது.
தூதரக ஊழியர்களில் மத்தியில் உரையாற்றிய தூதர், தேசிய நலன், இலங்கையர்களின் நலன் மற்றும் இலங்கை, கத்தாரிடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவங்களை வலியுறுத்தியதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான முதலீடு உள்ளிட்ட இலக்குகளையும் அடையவும் பணியாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
கட்டாருக்கான தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் தொழில்நுட்ப, செயற்பாட்டுத் தலைவராக இலண்டனில் கேபிடல் பார்ட்னர்ஸில் பணியாற்றியுள்ளதுடன், இலண்டன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிலும் பதவியையும் வகித்துள்ளார்.
கொழும்பின் டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பொறியியல்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார்.