பாகிஸ்த்தான் நடிகை ஷாரா அல்பலுஷி (Zara Albalushi) க்கு சவுதி அரேபியாவின் நிரந்தர வதிவிட உரிமம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியினை சரளமாகப் பேசும் ஷாரா அல்பலுஷி சவுதி அரேபியாவிலேயே பிறந்து வளர்ந்து சவுதியிலேயே கல்வி கற்றவராவார்.
39 வயதான ஷாரா அல்பலுஷி 2019ம் ஆண்டு சவுதியில் உள்ள வெளிநாட்டினரும் நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக் கொள்ள கொண்டு வரப்பட்ட சட்டத்தின் ஊடாக அவர் தற்போது தனக்கான நிரந்தர வதிவிட உரிமையினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஷாரா அல்பலுஷி சவுதி அரேபியாவில் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து நாடகங்களில் நடித்து வருபவராவார் மேலும் ஏனைய வளைகுடா நாடுகளின் தொலைக்காட்சி நாடகங்களிலும் அவர் நடித்து வருகின்றார்.
தனக்கு நிரந்தர வதிவிட உரிமம் கிடைத்தமை குறித்து அவர் குறிப்பிடுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், இனி சவுதி அரேபியாவினை எனது நிரந்தர இருப்பிடமாக நான் எப்போதும் சொல்வேன், இதற்கு சவுதி அரேபியாவுக்கு நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.