Ads Area

சாய்ந்தமருது குப்பை விவகாரம்; யார் பிழை செய்கின்றனர்?

 எம்.வை. அமீர், நூருள் ஹுதா உமர். 

சாய்ந்தமருது எதிர்நோக்கும் பாரிய சவால் என்றால்; அன்றாடம் வீடுகளில் சேரும் திண்மக்கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான். இதற்குப்பின்னர்தான் ஏனைய அத்தனையும். குப்பை விவகாரத்துக்காக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றன. முடிவு என்றால் சந்திக்கு சந்தி குப்பைமேடுகள்தான்.

காலத்துக்குக்காலம் குப்பைகளை அகற்றுவதற்காக தீர்மானங்களும் குழுக்களும் வருகின்றன. ஆனால் காலப்போக்கில் காலாவதியடைந்து விடுகின்றது. முடிவு மீண்டும் அதே இடங்களில் குப்பைகள் ஆர்ப்பரிக்கின்றன.

திண்மக்கழிவுகளை முகாமை செய்வதில் கல்முனை மாநகரசபையின் அசமந்தப்போக்கா? அல்லது மக்களது அறியாமையா? இல்லையென்றால் ஊரை நிர்வாகிப்பவர்கள் மக்களை வழிகாட்டாமல் வேறுபணிகளில் ஈடுபடுகிறார்களா?

ஒருபக்கம் உலகளாவியரீதியான கொரோனா அச்சம், மறுபக்கம் நாங்கள் மறந்து போயுள்ள டெங்கு போன்ற நோய்கள் தாக்கக்கூடிய ஆபாயம். இவற்றை எதிர்கொள்ள மக்கள் தயாராகிவிட்டார்களா? அல்லது கழிவுகளை ஏதோவொரு மூலையில் வீசிவிட்டால் நாங்கள் பாதுகாப்புடன் உள்ளோம் என நினைப்பில் உள்ளார்களா?

கல்முனை மாநகரசபையே!  

சாய்ந்தமருதில் சேரும் திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கான புதிய திட்டங்கள் எதையாவது முன்வைத்துள்ளீர்களா? மாநகரசபை உறுப்பினர்களே! 

பாரதூரமான இந்த விடயம் தொடர்பில் நீங்கள் முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? மக்களுக்கு வெளிப்படுத்துவீர்களா? சாய்ந்தமருது சுகாதார வைத்திய பிரிவே! திண்மக்கழிவு விடயமாக நீங்கள் எடுத்துள்ள முன்னெடுப்புகள் என்ன? சாய்ந்தமருதை நிர்வாகிப்பவர்களே!  உங்களது கவனத்தை குப்பைக்குள்ளும் சற்று செலுத்துவீர்களா?

சாய்ந்தமருது மக்களே! நாங்கள் சுத்தத்தை பாதியாக ஏற்றுக்கொண்டவர்கள் என்றால் இனியாவது எங்களது கழிவுகளை ஏனையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது முகாமை செய்வீர்களா? என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe