சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியில் இன்று ( 2021.01.17) சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் H.M . அன்வர் அலி தலைமையில் இடம் பெற்ற இச் சிரமதான நிகழ்வில் இலங்கை இராணுவத்திற்கு கல்முனைப் பிராந்தியத்தின் சம்மாந்துறை வீரமுனை முகாமிலுள்ள இராணுவத்தினர் தமது முழு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
அத்துடன் அல் மர்ஜான் மகளிர் கல்லுாரியின் ஆண் ஆசிரியர்களும், கல்வி சாரா ஊழியர்களும் தமது முழு ஒத்துழைப்பினையும் வழங்கியிருந்தனர்.