Ads Area

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கான கட்டணங்கள் குறைக்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இரண்டு நடைமுறைகளைப் பின்பற்றப் போவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதே​வேளை தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல்களில் உட்படுத்தப்படும் நபர்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இரண்டு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஒரு நாளில் ஒரு விமான மூலம் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்றையது பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இங்கு வரும்போது அந்த விமானங்களில் சுமார் 75இலங்கையர்களை அழைத்து வருவதற்கு என்ற வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

300 நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களிலேயே 50அல்லது 75பயணிகளை ஏற்றிவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விமான டிக்கெட்டுகளின் கட்டணங்களை அதிகரித்து அறவிட வேண்டிய நிலை நேர்ந்தது.

தற்போது அந்தக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளை நான்கு , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு முறையே ஏழாயிரத்து ஐநூறிலிருந்து 12,500வரையான கட்டணம் அறவிடப்பட்டது. பின்னர் ஏனைய ஹோட்டல்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுமதிகோரிய போது பிரச்சினை உருவெடுத்தது. அதற்கிணங்க 3, 4,5நடசத்திர ஹோட்டல்களில் நாளை முதல் கட்டணங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe