(ரீ.எல்.ஜவ்பர்கான்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமுலில் இருக்கும் தனிமைப் படுத்தல் சட்டத்திலிருந்து 8 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்
1.164-காத்தான்குடி பிரி
2.164 யு காத்தான்குடி பிரிவு 5
3.164டீ காத்தான்குடி தெற்கு 5
4.164 ஊ காத்தான்குடி மேற்கு 4
5.167 காத்தான்குடி 1.
6.168 நு காத்தான்குடி 1 தெற்கு
7.162 காத்தான்குடி 6
8.167 னு புதிய காத்தான்குடி மேற்கு
9.167 ஊ புதிய காத்தான்குடி தெற்கு
10.162டீ காத்தான்குடி 6 மேற்கு
குறித்த பிரிவுகளே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.
கடந்த 31ம் திகதி முதல் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்து முடக்க நிலையில் இருந்து வருகின்ற நிலையில் நேற்று மாலை கூடிய மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி மேற்படி 8 கிராம சேவகர் பிரிவுகளையும் விடுவிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.ஏனைய 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப் படுத்தல் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
செய்திக்கு நன்றி - battinews