சம்மாந்துறை அல்-அர்சத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நிரந்தர அதிபராக எம்.ஏ.அப்துல் றஹீம் அவர்கள் நியமிக்கப்பட்டு இன்று அவர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிபர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சையின் முடிவின் பிரகாரம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தரக் கடிதத்தை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் முகாமைத்துவக் குழுவின் முன்னிலையில் எம்.ஏ.அப்துல் றஹீம் கையளித்தார்.
பிரதி அதிபர் எம்.அபூபக்கர் தலைமையில் நிகழ்வு நடந்தேறியது.