இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரச நிறுவனங்களை இந்தியாவுக்கு வழங்கப்படுவதை எதிர்த்த மக்கள் இப்போது எல்லாவற்றையும் சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.