இந்த வருடம் 2021 இல் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவிகளுக்காக சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லுாரியின் உயர்தரப்பிரிவு விஞ்ஞான துறை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான செய்முறைப் பயிற்சி முகாம் பாடசாலை உயர்தர விஞ்ஞான ஆய்வு கூடத்தில் நேற்று 2021.02.15ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் தலைமையில் அவரது வழிகாட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளரான A.L. அப்துல் மஜீட் சேர் அவர்களும், விஷேட அதிதியாக விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளரான மகாலட்சுமி செல்வராஜா அவர்களும் , கௌரவ அதிதியாக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் SM.அக்பர் சேர் அவர்களும் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களும் க.பொ.த உயர்தர மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.